கல்வி ஜிஹாத்

0
236

காதல் பெயரில் பெண்களை கவரும் லவ் ஜிஹாத், நிலங்களை ஆக்கிரமிக்கும் நில ஜிஹாத், உணவில் ஹலால் என அனைத்தையும் முஸ்லிம் மயமாக்கும் முயற்சிகளின் வரிசையில், முஸ்லிம் அடிப்படைவாதிகள் அடுத்து கை வைத்திருப்பது கல்வி ஜிஹாத். மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளை திட்டமிட்டே ஆக்கிரமிக்கும் முயற்சியை சில காலமாகவே அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் இதற்கு ஒரு சிறு உதாரணம். தற்போது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த கேரள முஸ்லிம் லீக் கட்சி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. முஸ்லீம் லீக்கால் ஆளப்படும் மலப்புரம் நகராட்சி சார்பில் ‘மிஷன் 1000’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய பல்கலைக் கழகங்களில் சேர 1,000 மாணவர்களுக்கு உதவி செய்யும் முயற்சி தொடங்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு உதவும் முயற்சியாக சித்தரிக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கை கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவும் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே என அப்பகுதியை சேர்ந்த ஹிந்து மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். டெல்லியில் சி.ஏ.ஏ வன்முறை போராட்டத்தை நடத்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here