பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை நசுக்க முடியவில்லை: ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

0
667

       இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளுக்கு ஜனநாயக உணர்வு அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை நசுக்க முடியவில்லை என்று கூறினார்.  

   அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயகத்திற்கான மாநாட்டில்  பேசிய பிரதமர் மோடி “லிச்சாவி, சாக்யா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு நகர-மாநிலங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் செழித்து வளர்ந்தன. அதே ஜனநாயக உணர்வு 10 ஆம் நூற்றாண்டின் உத்தரமேரூர் கல்வெட்டிலும் காணப்படுகிறது, இது ஜனநாயக கோட்பாடுகளின்  குறியீடாய் விளங்குகின்றன என்று அவர் கூறினார்.

     இந்த “ஜனநாயக உணர்வு மற்றும் நெறிமுறைகள் பண்டைய இந்தியாவை மிகவும் வளமான ஒன்றாக மாற்றியுள்ளன” என்று வலியுறுத்திய அவர், “நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சி இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை மாற்றிவிட முடியவில்லை” என்றும் அவர் கூறினார்.

     “மாறாத இந்த ஜனநாயக உணர்வே சுதந்திரத்திற்கு பிறகும் அதை  வெளிப்படுத்தி  கடந்த 75 ஆண்டுகளில் ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இணையற்ற வரலாற்றை  உருவாக்கியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார். 

   “இது கற்பனை செய்ய முடியாத அளவில் சுகாதாரம், கல்வி மற்றும் மனித நல்வாழ்வில் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் வரலாறு ” என்றும் அவர் கூறினார்.

     ஜனநாயகம் மக்களுக்கான நலன்களை வழங்க முடியும், ஜனநாயகம் வழங்கியுள்ளது, ஜனநாயகம் தொடர்ந்து வழங்கும்” என்று உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை இந்தியா வரலாறு  கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

 

    பல கட்சி தேர்தல்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகங்கள் போன்ற கட்டமைப்பு அம்சங்கள் ஜனநாயகத்தின் முக்கிய கருவிகள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், ஜனநாயகத்தின் அடிப்படை பலம் நமது குடிமக்கள் மற்றும் நமது சமூகங்களுக்குள் இருக்கும் உணர்வு மற்றும் நெறிமுறையாகும்.

   வியாழன் அன்று  அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொடங்கிவைத்த உச்சிமாநாட்டில் உரையாற்றும் போது, ​​”ஜனநாயகம் என்பது மக்களுடைய  மக்களால் மக்களுக்காக என்பது மட்டுமல்ல,மக்களுடனும் மக்களுடனும் கூட” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

 

      ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உச்சிமாநாடு கவனம் செலுத்தியது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனிநபர் மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் ஆகிய இரண்டையும் தலைவர்களும் வெளிப்படுத்தும் விதமாய் அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here