ஹெலிகாப்டர் விபத்து; சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் மரணம்

0
408

“இந்தியாவின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்கள். அந்த விபத்தில்  தப்பிய ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். அவர்  புதன்கிழமை அதிகாலை பெங்களுருவில் உள்ள  ஐஏஎஃப் கமாண்ட் மருத்துவமனையில் காலமானார். .

   Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேரில் 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர், அதே நேரத்தில் குரூப் கேப்டன் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிசம்பர் 9-ம் தேதி கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரின் மறைவிற்கு  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி, “குரூப் கேப்டன் வருண் சிங் நாட்டுக்கு பெருமை. வீரம் மற்றும் மிகுந்த தொழில் நிபுணத்துவத்துடன் சேவையாற்றினார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையை என்றும் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here