பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

0
670

    தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    ஷாஃப்டர் மேல்நிலைப் பள்ளி.இது திருநேல்வேலியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி.  இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கழிவறை சென்ற போது அவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      மீட்பு குழுவினர்,காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

      உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here