மத்திய பட்ஜெட்: மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை

0
475

 மத்திய நிதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் வரும் வியாழனன்று(டிசம்பர் 30) ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 2022-23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக நிதி நிறுவனங்களின் தலைவர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக  டிசம்பர் 30 அன்று மாநில நிதி அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டம் (ஆன்லைன் மூலமாக அல்லாமல்) நேரடியாக நடக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here