மனிதாபிமான அடிப்படையில் பாரதம் இரண்டாவது தவணையாக 500000 கொரோனா தடுப்பூசிகளை சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது. இவை காபுலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டன. ஏற்கனவே முதல் தவணையாக டிசம்பர் மாதத்தில் 1.6 டன் எடையுள்ள மருந்து பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் கோதுமை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க இருப்பதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேவி சக்தி நடவடிக்கையின் கீழ் 669 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.