ஜம்மு காஷ்மீரில் மருத்துவ இடங்களை விற்றது தொடர்பான வழக்கில் 9 ஹுரியத் தலைவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள குற்றபதிரிக்கையில் மருத்துவ இடங்களை விற்று வந்த பணத்தை தீவிரவாதத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பட், பாத்திமா ஷா, முகமது அப்துல்லா ஷா, சப்சார் அகமது ஷேக், முகமது இக்பால் மிர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அல்தாப் அகமது பட், காசி யாசிர் மற்றும் மன்சூர் அகமது பட் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.