தமிழகம்-14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு

0
476

சென்னை, செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் உள்ள 321 கொரோனா ஆய்வகங்களில் நேற்று மட்டும் 1.03 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 1,489; செங்கல்பட்டில் 290; திருவள்ளூரில் 147; கோவையில் 120; வேலுாரில் 105; காஞ்சிபுரம், திருப்பூரில் தலா 54 பேர் உட்பட 2,731 பேர் பாதிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 220 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டது.
அதில் சென்னையை சேர்ந்த 93 பேர் உட்பட 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 105 பேர் குணமடைந்த நிலையில், 13 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட மூன்று பேர், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநிலங்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மேற்கண்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here