இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்க வெளியுரவ்துறை அமைச்சர் அந்தோனி ப்ளிங்கனுடன் ஜனவரி 4ம் தேதி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு உறவுகள்,இந்தோ பசிபிக் நிலவரம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகளுக்கு இரு நாடுகளும் தயார் ஆகி வருகின்றன. இது இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடைபெறும். அதற்கு முன்னேற்பாடாக இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது. பாதுகாப்பு, உலகளாவிய பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுத்தமான எரிசக்தி மற்றும் காலநிலை நிதி, முதலான அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்தததாக . வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.