LED விநியோக திட்டம்-உஜாலா 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

0
656

மின்துறை அமைச்சகம் தனது முதன்மையான உஜாலா திட்டத்தின் கீழ் எல்இடி விளக்குகளை விநியோகம் செய்து ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
உஜாலா திட்டத்தின் மூலம் நாடு முழுதும் 36.78 கோடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் 47,778 மில்லியன் யூனிட்கள் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.86கோடி டன் CO2 உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.
Unnat Jyoti by Affordable LEDs for All (UJALA) எனப்படும் இந்த திட்டம் பாரதபிரதமர் மோடி அவர்களால் ஜனவரி 5, 2015 அன்று துவங்கப்பட்டது.
எல்இடி பல்புகளின் சில்லறை விலையை ஒரு பல்புக்கு 300-350 ரூபாயில் இருந்து 70-80 ரூபாயாக குறைப்பதில் UJALA வெற்றி பெற்றுள்ளது. மேலும் மின் ஆற்றலை சேமிப்பதிலும், CO2 உமிழ்வைக்குறைப்பதிலும் இது பெரிதும் வெற்றி அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here