15-18 வயது பிரிவினருக்கு கோவக்சின் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பாரத் பயோடெக் அறிவுறுத்தியுள்ளது. மற்ற தடுப்பூசிகளும் இந்த வயதினருக்கு செலுத்தப்படுவதாக தங்களுக்கு தகவல்கள் வந்துள்ளது எனத்தெரிவித்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவக்சின் மட்டுமே அவர்களுக்கு செலுத்தப்படுவதை கண்காணிக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வயதுபிரிவினருக்கென அனுமதிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி இதுவே ஆகும் எனவும் அது கூறி உள்ளது.
முன்னதாக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி திட்டம் ஜனவரி 3, 2022 முதல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Home Breaking News 15-18 வயது பிரிவினருக்கு கோவக்சின் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்-பாரத் பயோடெக் அறிவுறுத்தல்