வருவாய்த்துறை அரசு பதவிகளில் உருது மொழி கட்டாயமாக இருந்ததை நீக்கி அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக்கின் பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் இது குறித்து சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.
“இனி லடாக்கில் வருவாய்த்துறை ஆட்சேர்ப்புக்கு இனி உருது கட்டாயமில்லை. காஷ்மீர் ஆட்சியாளர்களால் லடாக்கின் மீது திணிக்கப்பட்ட உருது மொழியில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ள நம்கியால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, லடாக் லெப்டினன்ட் கவர்னர் ராதாகிருஷ்ண மாத்தூர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.