வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

0
801

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி,பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில்சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பரமபத வாசல் வழியே சென்றார்.
குளித்தலையில் உள்ள அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவில், ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகில் வடக்கு புதுப்பாளையம், கொளாநல்லி பெருமாள் கோவில், வடக்குப் புதுப்பாளையம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியில் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், கள்ள்குறிச்சி சங்கராபுரம் மணிநதி அருகே உள்ள அலமேலு மங்கா சமேத வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here