குடியரசு தின விழா: முன்கள பணியாளர்களை விருந்தினர்களாக அழைக்க முடிவு

0
420

இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு முதன்முறையாக, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமானப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கடைநிலைப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பு அனைவரையும் கவரும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக இதில் நேரடியாக கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிகையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் வெளிநாட்டு தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த முறை வெளிநாட்டு தலைவர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதற்கு மாறாக ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமானப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கடைநிலைப் பணியாளர்கள் ஆகியோர் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை உத்தேசித்து எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here