தொல்லியல் நிபுணர் டாக்டர் ஆர் நாகசாமி மறைவிற்கு பிரதமர் அஞ்சலி

0
558

பத்ம பூஷன் டாக்டர் ஆர் நாகசாமி ஜனவரி 23, 2022 அன்று தனது 91வது வயதில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டாக்டர். நாகசுவாமி இந்திய கலை மற்றும் சோழர்கால கல்வெட்டுக்களில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். இங்கிலாந்திற்கு கடத்தி செல்லப்பட்ட பட்டூர் நடராஜர் சிலை மீட்கும் வழக்கில் இவர் அளித்த ஆதாரங்கள் நீதிபதிகளின் பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது. அயோத்யா ராமஜன்ம பூமி வழக்கிலும் இவர் தொடர்ந்து 26 நாட்கள் பங்கேற்று ஆதாரங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here