குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.
நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றார். இந்த அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் துவங்கி, இந்தியா கேட் வரை நடந்தது. இதில், 1965, 1971 போரில் பயன்படுத்திய டாங்குகள் மற்றும் தற்போதைய நவீன ஆயுதங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.