தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தஞ்சை காவல் துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.