அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா விவகாரம் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த கேவியட் மனுவில் தனது மகள் லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.