பா.ஜ.க. மூத்த தலைவர் மறைந்தார்

0
608
1984ஆம் வருடம் நடைபெற்ற நாடாளு மன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் சந்துபட்ல ஜங்கா ரெட்டி. தற்போது தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹனுமகொண்டா தொகுதியில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர். மேலும் ஆந்திர சட்டப் பேரவைக்கும் பரக்கள் மற்றும் சாயம்பேட் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1984 தேர்தலில் இவருடன் வெற்றி பெற்ற மற்றொரு வேட்பாளர் குஜராத்தை சேர்ந்த ஏ.கே.பட்டேல் ஆவார். ஜங்கா ரெட்டியின் மறைவுக்கு நமது அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here