லதா மங்கேஷ்கருக்கு ராஜ்யசபாவில் அஞ்சலி:அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைப்பு

0
264

ஞாயிறன்று காலமான பாடகி லதா மங்கேஷ்கருக்கு ராஜ்ய சபாவில் திங்களன்று அஞ்சலி செலுத்தியது. மேலும் முன்னாள் உறுப்பினரான அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
“பின்னணி பாடகியாக மட்டும் இல்லாது, இரக்கமுள்ள மனிதராகவும் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்த ஒருவரை நாடு இழந்து விட்டது” என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கர் 1999 முதல் 2004 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here