ஹைதராபாத்,முச்சிந்தலில் உள்ள பத்ரவீதியின் முதல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள 120 கிலோ எடையுள்ள ஸ்ரீ ராமானுஜரின் தங்கச் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஸ்ரீ ராமானுஜரைப் போன்ற துறவிகள் மற்றும் தத்துவவாதிகள் இந்தியாவின் கலாச்சார அடையாளம், கலாச்சார தொடர்ச்சி மற்றும் கலாச்சார ஒற்றுமையை உருவாக்கி வளர்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.