‘ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம் வங்கிகளிடம் வாங்கிய கடன், முந்தைய காங்., ஆட்சியில் தான் வாராக் கடனாக மாறியது,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
இதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசும் போது முந்தைய காங்., ஆட்சியில் தான், அதாவது, 2014க்கு முன் தான், ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம் பல வங்கிகளிடம் வாங்கியிருந்த கடன், திருப்பித் தரப்படாமல் வாராக் கடனாக மாறியது. இந்த கடன் மோசடி குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான பெருமை வங்கிகளையே சாரும் என்று கூறியுள்ளார்.