மத்திய அரசின் முயற்சியால் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

0
302

மத்திய அரசின் முயற்சியால் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன், வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய ஜவுளித் துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங், ‘இந்திய ஜவுளித் துறைக்கு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானதாக உள்ளன. ‘பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சில் முன்னேற்றம் தெரிகிறது. இந்நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது’ என, நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதனால் சர்வதேச அளவில் எழுந்துள்ள போட்டியை சமாளித்து அந்த வெளி நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவானதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here