மத மாற்ற தடை சட்ட கோரிக்கை

0
310

கட்டாய மதமாற்ற தடை சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. கர்நாடகா, உத்திரப் பிரதேசம், குஜராத், ஒடிஷா, ஜார்கண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. எனவே இவற்றை முன்னுதாரணமாக கொண்டு, இதே போன்ற சட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்பட வேண்டும்.
கட்டாய மதமாற்ற தடை சட்டம் என்றதுமே, இது சிறுபான்மையினருக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது என்று சில அமைப்புகள் கூக்குரல் எழுப்புகின்றன. சில ஊடகங்களும் இதே நிலைப்பாட்டை எடுக்கின்றன. ஒரு மதத்தில் பிறந்த ஒருவர், வேறு ஒரு மதத்தை சுய விருப்பத்தின் பேரில் பின்பற்ற அரசியலமைப்பு அதிகாரம் வழங்குகிறது. கட்டாய மதமாற்ற சட்டத்தினால், இதற்கு எந்த தடையும் ஏற்படாது. ஆனால் பணம், பதவி, சலுகைகள் வழங்கியும், ஏமாற்றி மூளைச் சலவை செய்து மதம் மாற்றுவதும் தடுக்கப்பட வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் இது போன்ற மூளை சலவைகள் பெரும்பாலும் அரங்கேறுகின்றன. ஹிந்துக்களிடம் வலிய வந்து தங்கள் மத கோட்பாட்டை, பிற மத அமைப்பினர் திணிக்க முற்படுகின்றனர். மதம் மாறிய பிறகும், சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் அரசு பதிவேட்டில் ஹிந்துவாகவே தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் ஏராளம்.
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஊழியம் என்கிற பெயரில், மதமாற்ற முயற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி நூற்றுக்கணக்கான ஜெபகூடங்கள் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முளைத்துள்ளன. பள்ளி வாசலில், பூங்கா, கடற்கரை, ரயில் நிலையம் என்று எங்கும், ஹிந்துக்களிடம் பைபிள், குரான் தருகிறார்கள். இதை தடுக்க தற்போதய சட்டங்கள் போதுமானதாக இல்லை. இதை தட்டி கேட்கும் ஹிந்துக்களுக்கு சட்ட பாதுகாப்பு கூட இல்லை.

தமிழகத்தில் 18 ஆண்டுகள் முன்பு கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டது, பின்னர் அரசியல் காரணங்களுக்காக நீக்கப்பட்டது. தற்போது இந்த சட்டத்தை இயற்றவிடாமல் தடுப்பதும் அரசியல் மட்டுமே. இந்த சட்டத்தில் எந்த விதமான அரசியலும் இல்லை. கட்டாய மதமாற்றம் என்பது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியது தான். தற்போது நாம் கேட்பது கட்டாய மதமாற்ற தடை சட்டமே தவிர்த்து, ஹிந்துக்களை கட்டாயமாக மத மாற்ற தடை என்கிற சட்டம் இல்லை. இது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை குறி வைத்தும் இல்லை. இந்த சட்டங்கள் அமலில் உள்ள எந்த மாநிலத்திலும், இது தவறாக பிரயோகிக்கப்படவில்லை. உண்மை இவ்வாறு இருக்க, இந்த சட்டத்திற்கு எதிராக கூக்குரல் எழுப்புவதற்கு முக்கிய காரணம் அரசியல். மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயம் என்பதை உணர்ந்து, ஹிந்து சமுதாயம் ஒட்டுமொத்தமும் இந்த மதமாற்ற தடை சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர குரல் கொடுக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here