பொதுவாக தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கட்சி ஜெயிக்கும். ஒரு கட்சி தோற்கும் .இது நியதி. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது ஜாதி அரசியல் மட்டும்தான் .மதவாத கட்சி என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட பாஜக கட்சி ஜாதி , மத அரசியலை தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் பாஜக அனைத்து ஜாதியினரையும் திறமையாக கையாண்டு உள்ளது. அதன் ஓட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. 2022 முன்புவரை யாதவ் அல்லாத OBC வாக்கும் ஜாதவ் அல்லாத SCன் ஓட்டு மட்டுமே கிடைத்து வந்தது பாஜகவுக்கு. ஆனால் தற்போது ஏற்கனவே இருந்த ஓட்டுவங்கி மாறாமல் அப்படியே இருக்க மற்றஜாதியினரின் ஓட்டுகளை அதிகமாக வாங்கியுள்ளது. வழக்கமாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து வந்த பெரும்பாண்மை மக்கள் இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடங்களில் மட்டுமே வெற்றியை கொடுத்துவிட்டு பாஜக பக்கம் திரும்பி விட்டனர். இதன் விளைவாக பழைய சாதனைகளை முறியடித்து பாஜக அதிக இடங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் 2017 உற்பத்தி 39.6 7% இருந்த பாஜக ஓட்டு வங்கி தற்போது 42.4 % உயர்ந்து விட்டது .இருந்த போதிலும் சில இடங்களில் முஸ்லிம்களும் யாதவ் கட்சியினரும் சமாஜவாதி கட்சியின் வெற்றிக்கு காரணம் ஆகி விட்டனர். கிட்டத்தட்ட 40%லிருந்து 45 % இருக்கும் ஓபிசி மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் 120 இல் இருந்து 160 வரை ஓபிசி வேட்பாளர்களை நிறுத்தியது அரசியல் வல்லுனர்களின் கருத்துப்படி ஓபிசி வாக்கு வங்கி பாஜக விற்கு சரிந்துவிடும் .ஏனெனில்முந்தைய யோகி அரசிலிருந்து மௌரியா மற்றும் தாரம் சிங் போன்றவர்கள் பாஜகவை விட்டு விலகியதால் ஓபிசி ஓட்டு கிடைக்காது என்று நினைத்திருந்தனர் ஆனால் இவர்களால் சமாஜ்வாடி கட்சியை எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது உண்மை. 65 சதவிகித ஓபிசி மக்கள் இந்த முறையை பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். அகிலேஷ் யாதவ் கூட பல ஓபிசி தலைவர்களுக்கு கட்சி பதவி கொடுத்தும் தோல்வி அடைய முடிந்தது .மற்ற கட்சியில் இருந்து வெளியே வந்தவர்கள் கூட அகிலேஷிற்கு உதவியாக இல்லை மேலும் தேவ்பந்த் என்ற இடத்தில் முஸ்லிம்கள் மட்டுமே அதிகமாக உள்ள ஒரு நகரத்தில் 94 ஆயிரம் வாக்குகள் வாங்கி பாஜக ஜெயித்துள்ளது. இதன் மூலம் ஜாதி மத அரசியலை பாஜக முறியடித்து விட்டது என்பது கண்கூடாக தெரிகிறது.
– சந்திரசேகர்ஜி
balasekaran66@gmail.com