தமிழக அரசு, மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் பயிற்று மொழியாக கொண்ட இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக கொண்டு செயல்படுவதாகவும், இந்த பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என தகவல்.
சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.