திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்.

0
782

நாளை பங்குனி 1ல் 15/03/2022 ஆயில்ய நட்சத்திரத்தில்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்.

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும்.

சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது.

மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக 36 அடி உயரத்தில் அழகிய தேராக கட்டப்பட்டுள்ளது. இதன்மேல் 60 அடி உயரத்தில் மூங்கில் மற்றும் பனைமர துண்டுகளை கொண்டு கோபுர வேலைப்பாடுகளும், அதனை தொடர்ந்து வண்ண துணிகளை கொண்டு அலங்கரம் செய்யப்பட்டு 96 அடி உயரத்தில் 450 டன் எடையுடன் கூடிய தேர் அசைந்து வருவது பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும்.

தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here