ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியத்தின் அறிவிப்பின்படி, ஸ்ரீ அமர்நாத் கோயில் யாத்திரைக்கான பதிவு செய்யும் நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைனில் தொடங்கும். யாத்திரை வாகனங்களின் இயக்கத்திற்கு ரேடியோ அலைவரிசை அடையாளம் (RFID) அடிப்படையிலான கண்காணிப்புகள் அமைக்கப்படும். நாள் ஒன்றிற்கு 20,000 பதிவுகள் வரம்புடன் முன்பதிவு தொடங்கும். கடந்த ஆண்டுகளை விட இம்முறை பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அந்தந்த மாவட்டங்களில் தங்கும் வசதிகளை அதிகரிக்கவும், இடங்களை கண்டறிந்து தயார்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலையில் போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகள், தண்ணீர் குளிரூட்டிகள் அமைக்கவும் துணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.