வங்காளதேசத்தில் இந்து கோவிலை உடைத்த 200 பேர்; பலர் காயம்

0
335

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் லால் மோகன் சஹா தெருவில், ராதாகந்தா என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென கோவிலுக்குள் புகுந்த 200 பேர் கொண்ட கும்பல் கோவில் மீது தாக்குதல் நடத்தியது.சம்பவத்தில் கோவில் சேதமடைந்தது. கோவிலில் இருந்த பலர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர். இதன்பின்பு கோவிலில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது. இந்த கும்பலை ஹாஜி சபியுல்லா என்பவர் வழிநடத்தி உள்ளார் என கூறப்படுகிறது.ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின்போது நடந்த துரதிர்ஷ்ட சம்பவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here