‘மாத்ருபூமி’ நூற்றாண்டு விழா பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

0
441

கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மாத்ருபூமி நாளிதழ், 1923,
மார்ச் 18ல் துவங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களான கே.பி.கேசவ மேனன், கே.மாதவன் நாயர், அம்பலக்கத் கருணாகர மேனன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், கே.கேளப்பன் ஆகியோர் நாளிதழை துவக்கினர்.
சுதந்திர போராட்டத்தில் துவங்கி நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மாத்ருபூமி நாளிதழுக்கு கேரளாவில் 10 பதிப்புகளும், மும்பை, சென்னை, பெங்களூரு, புதுடில்லியில் நான்கு பதிப்புகளும், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ஒரு பதிப்பும் உள்ளன. இவை தவிர, 11 வார, மாத இதழ்களும் வெளியாகின்றன. நாட்டின் தலைசிறந்த 10 நாளிதழ்களில் ஒன்றாக மாத்ருபூமி திகழ்கிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளிதழின் நுாற்றாண்டு விழா 2023ல் கொண்டாடப்படஉள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here