மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் நகரில் ராமேஷ்வர் அங்குஷ் காரத் என்ற ஹிந்து இளைஞர், தன் உறவினரான பிரசாத் பிரலாத் காரத்துடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த முஸ்லிம் இளைஞர்களுடன் கிணற்றில் நீச்சல் அடிப்பது தொடர்பாக சிறிய பிரச்சனை ஏற்பட்டது. இனி உன்னை இங்கு பார்த்தால் கொன்று விடுவோம் என முஸ்லிம் இளைஞர்கள் மிரட்டினர். இதனையடுத்து மாலையில் கடை வீதிக்கு சென்ற ராமேஷ்வர் அங்குஷ் காரத்தை 15 பேர் கொண்ட முஸ்லிம் மதவெறி கும்பல் கொடூரமாகத் தாக்கிக் கொன்றது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இப்ராகிம் சிராஜ் ஷேக், அட்னான் சுலானி ஷபிக் சுலானி, ஷோப் சுலானி ஷபிக் சுலானி, அசார் இஜாஸ் அலி ஷேக் உள்ளிட்ட 15 பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை மகாராஷ்டிர சட்ட மேலவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ கோபிசந்த் படால்கர் எழுப்பினார். இதனை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இறந்த சிறுவனின் பெற்றோருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரினார். முன்னதாக, இக்கொலைச் சம்பவம் குறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டு காவல் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், வர்த்தகர்கள் கூட்டமைப்பு, தங்கர் சமாஜ் ஆகியவை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.