ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு; சுட்டிக்காட்டி பாட வைத்த கவர்னர்

0
161

புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.இதனை நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம் பங்கேற்றனர்.விழா துவங்கியதும் மருத்துவமனைகளில் வழக்கமாக பாடப்படும் தன்வந்திரி வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இதனால் கவர்னர் தமிழிசை ‘டென்ஷன்’ அடைந்தார். அரசு விழாவில் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என அங்கிருந்த ஜிப்மர் அதிகாரிகளிடம் கேட்டதுடன், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. கவர்னர் சுட்டிக் காட்டி விழா மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here