கோயமுத்தூர் மாங்கரை யில்
எவிபி ஆயுர்வேதா ஆஸ்பிட்டல் அன்ட் டிரைனிங் அக்கடமி, வளாகத்தில் சேவாபாரதி தென் தமிழ்நாடின் செயற்குழ கூட்டம் நடைபெற்றன.
சேவா பாரதி தென் தமிழ்நாடின் கௌரவ தலைவர் திரு அரங்க ராமநாதன் முன்னிலையில் மாநில தலைவர் திரு டாக்டர் வடிவேல் முருகன் அவர்கள் தலைமையில் சேவா பாரதியின் மாநில துணை தலைவி திருமதி சுமதி மனோகரன், செயலாளர்கள் திருமதி பிரியா சிவகுமார், திருமதி சங்கீத வாரியர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற, இறை வணக்கத்துடன் செயற்குழு கூட்டம் துவங்கியது.
இக்கூட்டத்தில் சேவா பாரதியின் துறைவாரி செயல்பாடுகள், இந்த ஆண்டின் சேவை பணிகளின் இலக்கை அடையும் வழிவகைகளை விவாதிக்கபட்டது.
நம் நாட்டில் நல்லோழுக்கம், நற்குணங்கள், நல்ல பழக்கவழக்கங்களுடன் கூடிய மாணவ மாணவியர்களை உருவாக்கும் பொருட்டு, மே மாதம் முதல் வாரத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தோறும் 10 நாட்கள் கோடைகால பண்பாட்டு வகுப்புக்கள் 3000 இடங்களில் நடத்த தீர்மாணிக்கபட்டது.
2025 ஆண்டின் நிறைவில், சேவா பாரதி தென் தமிழ் நாட்டில் 20000 இடங்களில் சேவா காரிய பணிகள் செய்ய முடிவானது.
ஆர்எஸ்எஸ் வடதமிழக இணை அமைப்பாளர்
திரு ப்ரஷோபகுமார் உடன் இருந்து சேவா பணிகள் செவ்வனே நடைபெற ஆலோசனை நல்கினார்.
நிறைவாக ராஷ்டீரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரத சேவா பிரமுகர் திரு பத்மகுமார்ஜி அவர்களின் நிறைவுரையுடன் செயற் குழு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி தென் தமிழ்நாடு, மாநில பொதுச் செயலாளர் திரு சின்னபாலன்ஜி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,