தண்ணீரையும் சேமிக்க வலியுறுத்தல்

0
473

உலக தண்ணீர் தினத்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுடன் தண்ணீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மாறியிருப்பதைக் காண்பதற்கு மனம் நெகிழ்கிறது. தண்ணீரை சேமிப்பதற்காக பணியாற்றும் அனைத்து தனிநபர்களையும், அமைப்புகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க உலக தண்ணீர் தினத்தில் நாம் உறுதியேற்போம். தண்ணீர் சேமிப்பை உறுதி செய்யவும் நமது குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்கவும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை நமது நாடு மேற்கொண்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் தாய்மார்களின், சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்க மிகச் சிறந்தப் பணியை செய்கிறது. மக்களின் பங்கேற்புடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பை அதிகரித்து இந்தக் கோளின் நீட்டிப்புக்குப் பங்களிப்பு செய்வோம். சேமிக்கப்பட்ட ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நமது மக்களுக்கு உதவுகிறது. நமது முன்னேற்றத்தை அதிகரிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here