காஷ்மீரி பண்டிட்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனு மறுசீராய்வு

0
574

காஷ்மீரி பண்டிட்கள் மீது, 1989 – 1990, 1997 மற்றும் 1998ல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக, ஜம்மு – காஷ்மீரில், 200க்கும் மேற்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒன்றில் கூட விசாரணை நடத்தப்படவில்லை.காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விசாரிக்கக் கோரி, 2017ல் வழக்கு தொடரப்பட்டன. ஆனால், ‘சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டதால், உரிய ஆதாரம் கிடைக்காது’ என காரணம் கூறி, மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதற்கு முன், பல வழக்குகளில், பல ஆண்டுகள் கடந்த பிறகும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here