திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருப்பதி ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தராஜ சாமி சரித்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருப்பதியில் நேற்று 65,418 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,451 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.