பிரதமர் மோடியின் தேர்வுக்கு தயாராகும் நிகழ்ச்சி

0
324

‘தேர்வுக்கு தயாராவோம்’ என்ற நிகழ்ச்சியின் 5வது பகுதி நடைபெறவுள்ள 2022 ஏப்ரல் 1ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. தேர்வை அச்சமின்றி எழுதுவதற்கான வழிவகைகள் குறித்தும், வாழ்க்கையை திருவிழாவாக கொண்டாடும் வகையிலும் அதற்கான வழிமுறைகள் குறித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ‘தேர்வுக்கு தயாராவோம்’ (பரிக்ஷா பே சர்ச்சா) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளார். இதற்காக நடைபெறும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுமார் 15.7 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த நான்காண்டுகளாக மத்திய கல்வித் துறை அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. முதல் மூன்று பகுதிகள் டெல்லியில் நேரடியாக நடைபெற்றது. நான்காவது பகுதி 2021ல் ஆன்லைன் வழியே நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here