சாரதாதேவி கோயிலில் தீபாவளி

0
128

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தீட்வால் குக்கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாரதா தேவி கோயிலில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடந்த திங்கட்கிழமை, நூற்றுக்கணக்கான மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் இந்த சாரதா தேவி கோயில் பாரத துணைக் கண்டத்தின் முதன்மையான பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இது நீலம் நதிக்கரையில் உள்ள சாரதா கிராமத்தில் தேசப் பிரிவினைக்கு பிறகு கைவிடப்பட்ட கோயிலாகும். இது அக்காலத்தில் கல்வியின் முக்கிய மையமாக இருந்தது. தெற்காசியா முழுவதும் உள்ள 18 மிகவும் மதிக்கப்படும் கோயில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1947க்குப் பிறகு முதல்முறையாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் ஏராளமான உள்ளூர் பொதுமக்களும் மண் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி, இனிப்புகளை வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர் என்று ‘சேவ் சாரதா’ கமிட்டியின் தலைவர் ரவீந்தர் பண்டிதா தெரிவித்தார். ‘சேவ் சாரதா’ கமிட்டி கடந்த ஆண்டு இந்த கோயில் மற்றும் அருகில் உள்ள சீக்கிய குருத்வாராவை மீட்டெடுத்து புனரமைக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here