மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜல் சக்தித் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் துடு, ‘தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. எட்டு இணைப்புகளின் விரிவான திட்ட அறிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். அவரின் அறிக்கைப்படி தமிழகம் சார்ந்த நதிகளை இணைக்கும் திட்டங்களின் முன்மொழிவுகளின் விவரங்கள்: ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தொடர்புடைய பென்னாறு, காவிரி இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கையும், விரிவான திட்ட அறிக்கையும் நிறைவடைந்துள்ளன. கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி தொடர்புடைய காவிரி, வைகை மற்றும் குண்டாறு இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா தொடர்புடைய நேத்ராவதி மற்றும் ஹேமாவதி இணைப்பிற்கான சாத்தியக்கூறுக்கு முந்தைய அறிக்கை நிறைவடைந்துள்ளது. தமிழகம், கேரளா தொடர்புடைய பம்பா, அச்சன்கோவில் மற்றும் வைப்பாறு இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கை நிறைவடைந்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள 30 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 8.44 லட்சம் கோடி ஆகும். இருப்பினும், இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நேரத்தில் இது மாறுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here