தமிழகத்தில் ஹிந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு குறிவைத்து தொடர்ந்து இடித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தமிழக அரசின் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். ஆனால், ஊர் மக்கள் ஒன்று திரண்டு கோயிலை இடிக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளும், பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டன.. இதனால், அதிகாரிகள் செய்வதறியாது விழித்தனர். தற்போது ஊர் மக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல, தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேலூர் பகுதியிலுள்ள 2 கோயில்களை இடிக்க அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாகவும் பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம் நடத்த ஹி்ந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுபோல தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்படுவது தி.மு.க ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற அடிப்படையிலேயே மக்களால் பார்க்கப்படுகிறது. திராவிட, நாத்திக, கம்யூனிச சதித் திட்டங்களால் தொடர்ந்து பல விஷயங்களில் ஏமாந்துவிட்ட ஹிந்துக்கள், தங்கள் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காக்க கோயில்கள் விஷயத்திலாவது ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.