மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஆட்சி காலத்தில் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதனை எடுத்து 26வது குருமகா சன்னிதானம் ஆட்சிக் காலத்தில் 1997ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு (27ம் தேதி) காலை 10.35 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.