யோகி ஆதித்யநாத் அரசில் முஸ்லிம் அமைச்சர்

0
529

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன், 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.இவர்களில் ஒரே முஸ்லிம் அமைச்சராக, டேனிஷ் அன்சாரி, 32, நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட மேலவை உறுப்பினராக இல்லாத நிலையில், இவர் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது.இந்த நியமனம் மதத்துக்கு அப்பாற்பட்டது. அடிமட்ட தொண்டனின் உழைப்புக்கு கிடைத்து உள்ள அங்கீகாரம் இது. இதற்காக பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here