தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிருக்கு அதிகாரமளித்தல்

0
606

கிராமப்புற ஏழைப் பெண்களை சுய உதவி குழுக்களாக திரட்டும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 5.43 லட்சம் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, நடப்பு நிதியாண்டில் 2022 பிப்ரவரி 28 வரை 5.43 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஆண்டுக்கான இலக்கு 7.80 லட்சம் குழுக்கள் என தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 74.80 லட்சம் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகளிடமிருந்து கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டிக் கழிவு ஏற்கனவே வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக 2022-23-ஆம் வருடத்திலிருந்து வருடத்திற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெற மகளிர் சுய உதவி குழுக்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப்புற ஏழை குடும்பத்தில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது சுய உதவி குழுக்களுக்குள் கொண்டுவருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here