பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு இந்திய இளவில் நடைபெறும் நுழைத்தேர்வு நீட். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்.,2) முதல் மே 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.