ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்: அமித் ஷா விளக்கம்

0
452

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யும் பணி முடிவடைந்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினா். மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளித்து ஜம்மு-காஷ்மீரில் ஊராட்சித் தோ்தல் எவ்வித வன்முறையும் இன்றி முடிந்துவிட்டது. மாவட்ட ஊராட்சித் தோ்தலும் முடிவடைந்து விட்டது. தொகுதி மறுவரையறை செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீரை குடியரசுத் தலைவா் ஆட்சியிலேயே வைத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றர். ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்தக் கூட்டணியில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாஜக வெளியேறியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சட்டப்பேரவை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here