ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின் முதல்முறையாக, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலை டில்லி வருகிறார். இங்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசவுள்ளார்.ரஷ்ய கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குவது இருதரப்பு வர்த்தகத்தை இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய -ரூபிள் கரன்சிகள் வாயிலாக நடைமுறைப்படுத்துவது ஆகியவை மைய பொருளாக இருக்கும் என கூறப்படுகிறது.ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லி வரும் நாளில் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ், ஜெர்மனியின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்ஜென்ஸ் பிளாட்னர் ஆகியோரும் டில்லி வருகின்றனர்.