உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியா – ரஷியா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது… அது தான் எங்களுக்கு முக்கியம். உலக அமைப்பை சமநிலையில் வைத்திருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். நாங்கள் இருநாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எங்கள் அதிபர் (ரஷிய அதிபர் புதின்) பிரதமர் மோடிக்கு (இந்திய பிரதமர்) வாழ்த்துக்களை கூறியுள்ளார்’ என்றார்.