புர்கா பயங்கரவாதி கைது

0
596

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் குண்டு வீசிய புர்கா அணிந்த பெண் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பெண் பயங்கரவாதி பாரமுல்லாவில் வசிக்கும் ஹசீனா அக்தர் என்பதும், பயங்கரவாதி ஆசியா அந்த்ராபி நடத்தும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான துக்தரன் இ மில்லத் உறுப்பினராக இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர். இவரது கணவர் முகமது யூசுப் பட் பல கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர், 2016ல் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது. துக்தரன் இ மில்லத் என்பது காஷ்மீரின் மிகப்பெரிய ‘பெண் ஜிஹாதிகளின்’ வலையமைப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here