குற்றவியல் நடைமுறை மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது

0
415

நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த ‘பயோ மெட்ரிக்’ தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கலானது.’இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இம்மசோதா குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த, குற்றவாளிகளின் பயோ மெட்ரிக் தகவல் அவசியம். குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும், குற்றச்செயல்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இது உதவும்.குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவ அடையாளங்கள் குறித்த தகவல் சேகரிப்பு மசோதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்தை அடுத்து லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here