கர்நாடக மாநிலம், மேல்கோட்டை ஸ்ரீ செலுவ நாராயண ஸ்வாமி கோயிலில், தினமும் மாலை வேலையில் ராஜகோபுரத்தின் முன் நடைபெறும் மகா மங்களார்த்தியின் ஒரு அங்கமாக, இரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு, இரண்டு பேர் மூன்று முறை தலை வணங்குகிறார்கள். முஸ்லீம்கள் செய்யும் சலாத்தைப் போன்ற இது ‘சலாம் ஆரத்தி’ என்ற பெயரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் பூஜாரிகள், பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை நிறுத்துமாறு கர்நாடக ஹிந்து அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலில் சந்தியாராதி (மாலை பூஜை) நடத்தப்பட்டு வருகிறது. இதனுடன், திப்புவின் ஆட்சியில் ‘சலாம் ஆரத்தி’ அமல்படுத்தப்பட்டது. அதை நிறுத்திவிட்டு ‘சந்தியாரத்தி’ மட்டும் நடத்த வேண்டும்” என கோரியுள்ளனர். இதே நடைமுறையை பின்பற்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலிலும் அதனை கைவிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு வி.ஹெச்.பி வலியுறுத்தியது. இருப்பினும் கொல்லூர் கோயிலின் பூஜாரி இது பிரதோஷ பூஜையின் ஒரு பகுதி என்று ஒரு விளக்கத்தை வெளியிட்டார். முகலாய மன்னன் திப்பு சுல்தான் இந்த கோயில் பூஜையில் பங்கேற்று பிரதோஷ பூஜையின் போது சலாம் கொடுத்ததால் இந்த நடைமுறை ஒரு மரபாக இன்றுவரை பின்பற்றப்படுகிறது என கூறுகின்றனர். ஆனால், சமயப்பொறையற்ற திப்பு சுல்தான் லட்சக்கணகான ஹிந்துக்களை கொன்றதற்கும் நூற்றுக்கணக்கான கோயில்களை அழித்ததற்கும் சான்று உண்டே தவிர, திப்பு சுல்தான் அந்த கோயில்களுக்கு வந்ததற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. எனவே, உண்மையற்ற ஒன்றை இனியும் கடைபிடிக்க தேவையில்லை என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.